சந்தியா ராகம்.. சீரியலில் இருந்து ஏன் விலகினேன்
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சந்தியா ராகம் சீரியலில் இருந்து நாயகன் வெளியேறி இருக்கிறார்.
தற்பொழுது எல்லாம் மற்ற சேனலை விட ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சீரியலுக்கு தான் ரசிகர் மந்தையில் ஆதரவு பெருகி வருகிறது.
இந்த சீரியலுக்கும் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் அந்த சீரியலில் கதாநாயகனாக நடித்த சுர்ஜித் அந்த சீரியலில் இருந்து வெளியேறினார்.
தற்பொழுது தனது விலகளுக்கான விளக்கத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். கடவுள் எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் வைத்திருப்பார் சந்தியா ராகம் குடும்பத்தை விட்டு விலக உள்ளேன் என்னுடைய நிஜ குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு இது என்னுடன் பணியாற்றிய அனைத்து Technician ..களுக்கும், என்னை நம்பி இந்த கதாபாத்திரத்தை நடிக்க கொடுத்த இயக்குனருக்கும் நன்றி.
நான் உங்கள் அனைவரையும் நேசிக்கின்றேன் உங்கள் அன்பும் ஆதரவும் மேன்மேலும் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.
தற்பொழுது இந்த சீரியலில் சீனு வெளியூர் சென்றிருப்பதாக கதை நகர்கிறது அவரின் கதாபாத்திரத்தில் மனோஜ் பிரபு இனி நடிக்க உள்ளார் இவர் Youtube தொடர்களில் நடித்திருக்கிறார்.