in

அரசு பள்ளியில் நடைபெற்ற சங்கமம் விழா ..

அரசு பள்ளியில் நடைபெற்ற சங்கமம் விழா ..

 

கரகாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் ஆடி அசத்திய மாணவர்கள் …
பாரம்பரிய உணவுகளை காட்சிப்படுத்திய பெற்றோர் … அரசு பள்ளியில் நடைபெற்ற சங்கமம் விழா ..

புதுச்சேரி நகரத்தில் எக்கோல் ஆங்கிலஸ் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சங்கமம் விழா இன்று நடத்தப்பட்டது. இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தங்களது திறன்களை வெளிப்படுத்தினார்கள்.

விழாவிற்கு வந்த விருந்தினர்களை மாணவர்கள் காவடி ஆட்டம், கரகாட்டம், கோலாட்டம் ஆடி வரவேற்றனர்.

மாணவர்களின் பெற்றோர் வீட்டில் செய்து கொண்டு வந்திருந்த பாரம்பரிய உணவுகளை கண்காட்சியாக வைத்தனர்.

குதிரைவாலி பிரியாணி, கேழ்வரகு லட்டு, திணை பீசா, ராகி சேமியா லட்டு, கம்பு கஞ்சி, சுண்டல்கள், கருப்பு கவுனி பாயாசம், உளுந்தங்களி, கேழ்வரகு சேமியா இட்லி என ஐம்பதுக்கு மேற்பட்ட உணவு வகைகளை பெற்றோர் தயாரித்து கொண்டு வந்து காட்சிப்படுத்தினார்கள்.

 

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஒதியன்சாலை காவல் நிலைய ஆய்வாளர் செந்தில் பேசுகையில் சங்கமம் விழாவில் வைத்துள்ள பாரம்பரிய உணவு வகைகளை குழந்தைகளுக்கு தினமும் வீட்டில் கொடுத்தால் அவர்கள் ஆரோக்கியமாகவும் திறமைசாலியாக வளர்வார்கள் என்றார்.

What do you think?

‘லேடி சூப்பர் ஸ்டார்’ பட்டம் வேண்டாம்

காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி குற்றச்சாட்டு