in

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் – பணிகள் பாதிப்பு.

மாநகராட்சி சுகாதார ஆய்வாளரை கண்டித்து 2 ஆவது நாளாக 100 வார்டுகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பணிகளை புறக்கணித்து போராட்டம் – பணிகள் பாதிப்பு.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை கண்காணிப்பதற்காக வார்டு வாரியாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் மூலமாக பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது

இந்த நிலையில் 50, 51, 52, 54, 55, 76,77 ஆகிய வார்டுகளை கண்காணிக்கும் சுகாதார ஆய்வாளர் தூய்மை பணியாளர்களுக்கு அதிக அளவிற்கு பணிச்சுமையை வழங்குவதாகும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக பணி செய்ய வற்புறுத்துவதாகவும் தூய்மைப் பணிகளில் ஈடுபடக்கூடிய பணியாளர்களை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசுவதாக கூறி 2வது நாளாக மாநகராட்சி 3ஆவது மண்டல அலுவலகத்தில் தமிழ்நாடு சுகாதாரப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் தூய்மை பணியாளர்கள் ஏராளமானோர் தூய்மை பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளிலும் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் தூய்மை பணிகள் பாதிக்கப்பட்டது

இதனையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் மீண்டும் போராட்டம் நீடிக்கிறது.

What do you think?

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்.

உலக நன்மை வேண்டி உத்தரகாண்டில் இருந்து ராமேஸ்வரம் வரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் சாலையில் ஊர்ந்தபடி யாத்திரை: