சஞ்சீவ் விலகுகிறார்…. விரைவில் கயல் சீரியலுக்கு சுபம்
சன் டிவியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் ஒன்று கயல், பிரைம் டைம் சீரியலான கயல் அதிக TRP ரேட் பெற்று தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
தந்தையை இழந்த குடும்பத்தின் பொறுப்புகளையும் ஏற்கும் கயலை சுற்றி பின்னப்பட்ட கதையில்.
சைத்ரா ரெட்டி கயலாகவும், சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்கள். சஞ்சீவ் இந்த சீரியலை விட்டு வெளியேறுவதால் விரைவில் கயல் சீரியலுக்கு விரைவில் சுபம் போட இருக்கிறார்கள்.
தனிப்பட்ட காரணங்களுக்காக விலக முடிவு செய்ததாகவும் பல மாதங்களுக்கு முன்பே இந்த செய்தி வெளியாகத் தொடங்கிய நிலையில், சஞ்சீவ் அது குறித்து வாய் திறக்காமல் இருந்தார். ஆனால் இப்போது அவர் மௌனம் களைத்துவிட்டார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சஞ்சீவ் ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அதில் “இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார். எனவே, நடிகர் உண்மையில் வெளியேறுவது போல் தெரிகிறது.
சஞ்சீவ் தனது மனைவி ஆலியா மானசாவுடன் புதிதாகத் தொடங்கபடும் இனியா சீரியலில் கமிட் ஆகி இருப்பதால் விலகுவதாக தெரிகிறது, ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் கிடைக்கவில்லை. சஞ்சீவ் உண்மையில் என்ன நடந்தது என்பதை விளக்கும் வரை காத்திருப்போம்.
கயல் சீரியல் முடியும் நிலையில் தற்பொழுது திருமுருகன் இயக்கும் சீரியல் அந்த ஸ்லாட்..டில் ஒளிபரப்பாக போகிறதாம், சீரியலின் படப்பிடிப்பு தொடங்கிவிட்ட நிலையில் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்கலாம், ரசிகர்களின் Favourite சீரியல்….லான மெட்டி ஒலி இரண்டாம் பாகம் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாக இருக்கிறது.