in ,

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தங்கத்தேர் கோவில் பிரகாரத்தின் நடுவழியில் பழுதாகி நின்றதால் பக்தர்கள் வேதனை

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தங்கத்தேர் கோவில் பிரகாரத்தின் நடுவழியில் பழுதாகி நின்றதால் பக்தர்கள் வேதனை-தங்கத்தேர் பராமரிப்பு பணிகளை கோவில் நிர்வாகம் சரிவர செய்வதில்லை என குற்றச்சாட்டு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோவில் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன் செய்து வழிபாடு செய்வது வழக்கமாகும் குறிப்பாக தாங்கள் நினைத்த காரியம் நிறைவேற கோமதி அம்மனை தங்க தேரில் இழுத்து வழிபடுவது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பக்தர்கள் கருதுகின்றனர்

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுது பார்க்கும் பணிக்காக தங்க தேர் பவனி நிறுத்தி வைக்கப்பட்டது தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 8 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தங்க தேர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மீண்டும் தேர்பவனி துவக்கி வைக்கப்பட்டது

இந்நிலையில் நேற்று சங்கரன்கோவில் மற்றும் பெரியசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு குடும்பத்தினர் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவதற்காகதங்க தேர் இழுப்பதற்கான கட்டணத்தை கோவில் நிர்வாகத்திடம் செலுத்தி இரு குடும்பத்தினரும் இணைந்து இரவு மணிக்கு தங்கத்தேரை வடம் பிடித்து இழுத்து கோவில் பிரகாரத்தை சுற்றிவர துவங்கினர் அப்போது நிலையத்திலிருந்து சிறிது தூரம் சென்ற தங்கத்தேர் சற்றும் எதிர்பார்க்காத வண்ணம் சக்கரங்கள் சுழல மறுத்து பிரகாரத்தின் நடுவழியில் நின்றது உடனடியாக கோவில் ஊழியர்கள் சக்கரத்தை பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களால் அதை சரி செய்ய முடியாமல் போனதால் தங்கத் தேர் பவனி பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது தங்க தேரின் வண்ண விளக்குகள் அணைக்கப்பட்டது இதனால் கட்டணம் செலுத்தி நேர்த்திக் கடன் செலுத்த வந்த பக்தர்கள் மன வேதனைக்கு உள்ளாகி பணியில் இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பக்தர்கள் கோவில் நிர்வாகம் தங்க தேர் பராமரிப்பு பணிகளை சரிவர செய்வதில்லை என குற்றச்சாட்டை முன் வைத்தனர்

சுமார் 8 லட்சம் மதிப்பீட்டில் கோவில் நிர்வாகம் தங்கத்தேர் பராமரிப்பு பணிகளை மேற்கொண்ட நிலையில் பாதி வழியில் சக்கரம் சுழல மறுத்து தங்கத்தேர் நடுவழியில் நின்ற சம்பவம் பக்தர்களிடம் பெரும் அதிர்ச்

What do you think?

ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் திருக்கோயிலில் புரட்டாசி 2 வது சனிக்கிழமை கருடசேவை புறப்பாடு

சாத்தூர் அருகே திடீர் பட்டாசு வெடி விபத்து சுமார் 10 கிலோ மீட்டருக்கு அதிர்வுகள்