in

சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா சந்தனக் கூடு திருவிழா

சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா சந்தனக் கூடு திருவிழா

 

திருவாவடுதுறை சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா சந்தனக் கூடு திருவிழா திரளான பொதுமக்கள் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் திருவாவடுதுறை கிராமத்தில் அமைந்துள்ள சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் தர்ஹா மிகவும் பிரசித்தி பெற்றது.

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இத்தலத்திற்கு பல்வேறு சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான பொதுமக்கள் மத பாகுபாடின்றி ஏராளமானோர் வந்து வழிபாட்டினை மேற்கொண்டு வருகின்றனர்.

சாந்தா சாஹிப் வலியுல்லாஹ் சந்தனக் கூடு திருவிழா கடந்த 3ம் தேதி மவ்லீது ஷரீப்புடன் ஆரம்பமானது. மவ்லீது ஷரீப் தொடர்ந்து நேற்று மாலை சந்தனக் கூடு துவங்கி இன்று அதிகாலை சந்தனக் கூடு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் தர்ஹாவிற்கு வந்தடைந்தது அதனை தொடர்ந்து புனித சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெற்றது.

What do you think?

மின்சார ஒயர் மீது தடுமாறி விழுந்த கட்டிட தொழிலாளி

அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் நடத்தும் 14-ஆம் ஆண்டு காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை