in ,

திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழா


Watch – YouTube Click

திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழா

 

மயிலாடுதுறை பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி உத்வாகநாத சுவாமி கோயிலில் சப்பர திருவிழா; ஏராளமான பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பிரசித்தி பெற்ற திருமணஞ்சேரி கோகிலாம்பாள் சமேத உத்வாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலின் மாசி மக பெருவிழா கடந்த 14-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை, மறுநாள் 15-ஆம் தேதி கொடியேற்றத்துடனும் தொடங்கியது.

விழாவின் முக்கிய உற்சவங்களில் ஒன்றான சப்பரத் திருவிழா இன்று நடைபெற்றது.

இதையொட்டி கோகிலாம்பாள் அம்பாள் மற்றும் சமேத உத்வாகநாதர் சுவாமி உற்சவமூர்த்திகள் 2 ஓலை சப்பரத்தில் தனித்தனியே எழுந்தருள செய்யப்பட்டு, கோயிலின் நான்கு வீதிகளின் வழியே பக்தர்கள் ஊர்வலமாக இழுத்து வந்தனர். வழியெங்கும் பக்தர்கள் சுவாமி அம்பாளுக்கு தீபாராதனை எடுத்து வழிபாடு நடத்தினர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.


Watch – YouTube Click

What do you think?

பாஜகவில் இணைகிறார் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மாசி மக தேரோட்டம்