மோகனூர் பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சத்தியநாராயண பூஜை
நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹா’ரத்தில் உள்ள அருள்மிகு கல்யாண பிரசன்ன வெஙகட்ரமண பெருமாள் ஆலயத்தில் ஆடிமாத திருவோணநட்சத்திர தினத்தை முன்னிட்டு சத்திய நாராயண பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக சத்திய நாராயண திருவ படத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பட்டாச்சாரியார்கள் பக்தர்களுக்கு சத்திய நாராயண பூஜை உருவான கதைகளை எடுத்துரைத்தார்.
அப்போது சத்திய நாராயண சுவாமிக்கு நட்சத்திர தீபம் கும்ப தீபம் மகா தீபம் காண்பிக்கப்பட்டது மஹா தீபம் அப்போது உற்சவ பெருமாளுக்கு மகா தீபம் காண்பிக்கப்பட்டது.
இதில் பல்வேறு மாவட்ட பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு பெருமாளை வணங்கிச் சென்றனர்.