in

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சத்யநாராயண பூஜை

 

மோகனூர் பெருமாள் ஆலயத்தில் திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு சத்யநாராயண பூஜை

 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அக்ரஹாரத்தில் உள்ள கல்யாண பிரசன்ன வெங்கட் பெருமாள் ஆலயத்தில் தை மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு மூலவர் பஞ்சாமிர்தம் தேன் பால் தயிர் திருமஞ்சனம் மஞ்சள் சந்தனம் சொர்ணம் அபிஷேகமும் பின்னர் தங்க வசசிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது.

மாலை உற்சவ பெருமாள் கருடசேவை அலங்காரத்திலும் பக்தர்களுக்கு திரு காட்சி தந்தார் அப்போது துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது பின்னர் சத்திய நாராயண பூஜை விழா கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

அப்போது சத்திய நாராயண பூஜை உருவான கதைகள் கூறப்பட்ட பின் சத்திய நாராயண திருவுருவப்படத்திற்கு மற்றும் உற்சவ பெருமாளுக்கு சிறப்பு அர்ச்சனை தீப துப உபசரிப்புகள் ஷோடச உபச்சாரம் செய்யப்பட்டு மகா தீபம் காண்பிக்கப்பட்டது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சத்திய நாராயண பெருமாளை வணங்கிச் சென்றனர்.

What do you think?

தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி