காவல்துறை சார்பில் SAY NO DRUGS என்ற போதைப்பொருள் விழிப்புணர்வு
புதுச்சேரியில் காவல்துறை சார்பில் SAY NO DRUGS என்ற கருத்தை மையமாக வைத்து பள்ளி இடைநிற்றல் குற்ற பின்னணி உள்ளவர்களுக்கான போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு கேரம் போட்டி நடைபெற்றது
புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை ஒழிக்க புதுச்சேரி போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கராத்தே சங்கம் மற்றும் கேரம் அசோசியேஷன் ஆகியவற்றுடன் இணைந்து SAY NO DRUGS என்ற கருத்தை மையமாக வைத்து இன்று உருளையன்பேட்டை காவல் நிலையம் சரகத்திற்கு உட்பட்ட குற்ற பின்னணி உள்ளவர்கள் மற்றும் பள்ளியில் இடைநிற்றல் மாணவர்களுக்கான போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு கேரம் போட்டி நடைபெற்றது.
புதுச்சேரி தனியார் பள்ளியில் நடைபெற்ற கேரம் போட்டியில் புதுவை மாநிலத்திலிருந்து 10 குழுக்களை சேர்ந்த சுமார் 60-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த போட்டியை புதுச்சேரி முது நிலை காவல் கண்காணிப்பாளர் நாரா. சைதன்யா மற்றும் காவல் கண்காணிப்பாளர்கள் வம்சித ரெட்டி, பக்தவச்சலம், லஷ்மி சௌஜன்யா ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
இதில் திரளான காவலர்கள் பொதுமக்கள் மாணவ மாணவிகள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.