in

ராஜபாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மேக்தா மேரி பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள்

ராஜபாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மேக்தா மேரி பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள்

 

ராஜபாளையம் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் மேக்தா மேரி பயனாளிகளிடம் லஞ்சம் வாங்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ்நாடு அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் ஏழைகள், தாழ்த்தப்பட்டோர், பெண்கள், குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவரின் நலனை உறுதி செய்யும் விதமாக பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பயனடையும் வகையில், முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம், மகளிர் உரிமை தொகை, தொட்டில் குழந்தைத் திட்டம், குழந்தை தத்தெடுப்பு, திருமண நிதி உதவித் திட்டம், இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், அரசு சேவை இல்லங்கள் மற்றும் பணிபுரியும் மகளிர் விடுதிகள் போன்ற திட்டங்கள் மூலம் பெண்களின் பாதுகாப்பு மற்றும் நலனை மேம்படுத்தி வருகிறது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் செயல்படும் சமூக நலத்துறை அலுவலகத்தில் சமூக நலத்துறை விரிவாக்க அலுவலராக பணியாற்றும் மேக்தா மேரி என்பவர் பயனாளர்களிடம் லஞ்சம் வாங்கும் வீடியோ தற்போது சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது. இயலாத நிலையில் அரசு வழங்கும் உதவியை நாடி வரும் ஏழை, எளிய மக்களிடம் அரசு அதிகாரி லஞ்சம் வாங்கும் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

What do you think?

சுவடே தெரியாமல் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ள பயிர்கள்

நாக்கை இரண்டாக பிளந்து டாட்டூ போட்டு பாம்பு போல் நீட்டி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது