in

வாக்கு சாவடிகளை வடிவமைத்த பள்ளி மாணவர்கள்


Watch – YouTube Click

தேங்காய் குரும்பு, சோலை இலை, மூங்கில், பாக்கு தட்டுகளைக் கொண்டு மாதிரி வாக்கு சாவடிகளை வடிவமைத்த பள்ளி மாணவர்கள்…

புதுச்சேரி அரசு பள்ளி நுண்கலை ஆசிரியர் உமாபதி. பல்வேறு மாணவர்களை வைத்து இயற்கை பொருட்களைக் கொண்டு பல்வேறு வடிவங்களை வடிவமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தேர்தல் நேரம் என்பதால் புதிய வாக்காளர்கள் வாக்கு மையங்களுக்குள் எவ்வாறு சென்று வாக்கு செலுத்துவது என்பது குறித்தான மாதிரி வாக்கு சாவடியை உருவாக்கியுள்ளனர்.

தேங்காய் குரும்பு, சோலை இலை, மூங்கில், பாக்கு தட்டுகளைக் கொண்டு தேர்தல் அலுவலர்கள் அமர்ந்திருக்கும் இடம், வாக்குப் பதியும் இடம், வாக்குப்பதிந்து விட்டு எவ்வாறு வருவது, மேலும் வாக்காளர்கள் தெரிந்து கொள்ளக்கூடிய பல்வேறு விழிப்புணர்வு பதாகைகள் என அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.

புதுச்சேரி கரிகலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் சதீஷ் மற்றும் கதிர்காமம் அரசு பள்ளியை சேர்ந்த மாணவி சௌமியா ஆகியோர் இணைந்து இயற்கை பொருட்களைக் கொண்டு வடிவமைத்து உள்ளது வெகுவாக அனைவரையும் கவர்ந்துள்ளது.


Watch – YouTube Click

What do you think?

விவசாயி சின்னம் அச்சடித்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழர் கட்சி வேட்பாளர்

புதுச்சேரியில் இன்று தொடங்கிய 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு