in

தொடரும் அரசின் அலட்சியம் அச்சத்தில் பள்ளி மாணாக்கர்கள்


Watch – YouTube Click

தொடரும் அரசின் அலட்சியம் அச்சத்தில் பள்ளி மாணாக்கர்கள்

 

உடைந்த கதவுடன் ஒரு வழிப்பாதையாக ஓட்டை உடைசலுடன் இயக்கப்பட்ட மேலூர் அரசு பேருந்து – தொடரும் அரசின் அலட்சியம் – அச்சத்தில் பள்ளி மாணாக்கர்கள்

மதுரை மண்டல போக்குவரத்துத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பராமரிப்பின்றி தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துவருகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் போக்குவரத்து டெப்போவிலிருந்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்திற்கு இயக்கப்படும் TN58 – N1542 என்ற பதிவெண் கொண்ட அரசு பேருந்தானது பின்புற கதவுகள் சேதமடைந்து பின்புற வாசலில் சாய்த்துவைக்கப்பட்ட நிலையில் இயக்கப்படுகிறது

இதனால் பின்புற படிக்கட்டுகளை பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருகிறது நேற்று மாலை பேருந்து இயக்கப்பட்டபோது பின் வாசல் வழியாக ஏறுவதற்கு மாணாக்கர்கள் முயற்சி செய்தபோது திடீரென வாசலை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

எதிர்பாராத விதமாக அவசர காலகட்டத்தில் இது போன்ற படிக்கட்டுகளில் ஏற முற்பட்டால் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நிலையில் பேருந்துகள் இயக்கப்பட்டது

ஆனாலும் இதனை சற்றும் உணராத போக்குவரத்து துறை அதிகாரிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு பேருந்தினை இயக்குவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே போக்குவரத்து துறை சார்பில் ஆபத்தான நிலையில் உள்ள பேருந்துகளை ஆய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என போக்குவரத்து துறை தெரிவித்த நிலையிலும் மதுரை மண்டலத்தில் தொடர்ச்சியாக ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவிற்கு பொதுமக்களுடைய உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இயக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பள்ளி மாணவ மாணவிகளின் உயிரோடு விளையாடும் வகையில் இதுபோன்று ஆபத்தான முறையில் பள்ளி வேலைகளில் இயக்கப்படும் அரசு பேருந்துகளால் மானக்கர்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவுள்ளது.

எனவே இது போன்ற அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் இல்லையெனில் புதிய அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த அரசு பேருந்து ஒரு புற படிக்கட்டு முழுவதுமாக சேதமடைந்த நிலையில் ஒரே ஒரு படிக்கட்டில் மட்டும் ஒரு வழி பாதை போல பயணிகள் பயன்படுத்தி வந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

ஏராளமான அரசு பேருந்துகள் ஓட்டை உடைசலாக இயக்குவதற்கு தகுதியற்ற முறையில் ஆபத்தான முறையில் இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Watch – YouTube Click

What do you think?

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருமலையில் சாமி தரிசனம்

குவைத் தீ விபத்தில் செஞ்சி இளைஞர் நிலை குறித்து தகவல் தெரியாத நிலையில் குடும்பத்தினர் தவிப்பு