in

மதுரையில் பள்ளி மாணவர்கள் 6 மணி நேரம் நுண் ஜாக் சுற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்

மதுரையில் பள்ளி மாணவர்கள் 6 மணி நேரம் நுண் ஜாக் சுற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்

60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஆறு மணி நேரம் தொடர்ந்து நுன் ஜாக் சுற்றி சாதனை செய்துள்ளனர்.

உலக புகழ்பெற்ற நடிகர் புரூஸ் லீ மூலம் உலக அளவில் அறியப்பட்ட தற்காப்பு கலையான நுண் ஜாக் அந்தக் கலையில் மதுரை மாணவர்கள் 6 மணி நேரம் தொடர்ந்து முன் ஜாக் சுற்றி சாதனை படைத்தது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளனர்.தற்காப்பு விளையாட்டுத்துறையில் மாணவர்களுக்கு ஆர்வம் வரவேண்டும் என்று எண்ணத்தில் மதுரையில் உள்ள எம்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் மதுரையில் பல்வேறு பள்ளியில் பயிலும் 60 மாணவ மாணவிகள் தொடர்ந்து ஆறு மணி நேரம் நுண் சாக் சுற்றி சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றனர்..

இது போன்ற விளையாட்டுகளில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு அரசு வழங்கும் சலுகைகளை பெற்று அவர்களின் எதிர்காலத்தை முன்னேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோன்று பயிற்சி அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் டேக்வாண்டோ,குங்ஃபூ, சிங்கிள் டபுள் ட்ரிபிள் நுண் ஜாக் போன்றவற்றில் தற்போது மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்கின்றனர்.

மதுரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பல்வேறு உலக சாதனை உள்ளனர் அந்த வகையில் தேசிய அளவில் சாதனை புரிந்தனர். மதுரை சேர்ந்த மாணவ மாணவிகள் நுண் ஜாக் விளையாட்டில் தங்கம் மற்றும் வெள்ளி பதில்களை பரிசாக பெற்றுள்ளனர்.

இது போன்ற விளையாட்டுகள் அரசு பள்ளியிலும் தற்போது நடைபெற்று வருவதால் அரசு பள்ளி மாணவ மாணவிகள் இதில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெறுகின்றனர்.

இந்த விளையாட்டை பொருத்தவரை ஒரு அரங்கில் மாணவர்கள் ஒன்றாக கூடி தொடர்ந்து ஆறு மணி நேரம் இந்த தற்காப்பு கலையான நூல் ஜாக் சுற்றி சாதனை படைத்தனர் இதை சோலா சோழன் புத்தக குழுவினர் முழுமையாக கண்காணித்து வீடியோ பதிவு செய்து பாராட்டுகளையும் பதக்கங்களையும் வழங்கினார்கள்

What do you think?

நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு காளியம்மன்,பகவதியம்மன் கோவில் பெண்களின் முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் பூங்கரகத்தில் எழுந்தருளி ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தார்.

மதுரையில் ரயில் ஓட்டுநர்களுக்கு புதிய நவீன ஓய்வு அறை