in

திருவண்ணாமலை செங்கம் பகுதியில் அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் அவதிக்குள்ளாகும் பள்ளி மாணவிகள் மற்றும் குடியிருப்பு வாசிகள்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாள்தோறும் குரங்குகள் கூட்டம் கூட்டமாக பள்ளி அறைக்குள் சென்று மாணவிகள் எடுத்து வரும் மதிய உணவை மாணவிகளிடம் இருந்து பறித்து உண்பதற்காக குரங்குகள் பள்ளி அறைக்குள் சென்று மாணவிகள் அச்சுறுத்தி வரும் நிலையில் ஆசிரியர்கள் கற்பிக்கும் பாடங்களை கவனிக்காமல் எப்பொழுது குரங்குகள் தங்களை கடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்

மேலும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குரங்கள் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்துவதால் குடியிருப்பு வாசிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்

வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி வளாகங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் குடியிருப்பு மாவட்ட வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்

What do you think?

திருவிடைமருதூரில் ஒரே நாளில் திருக்கோயில்களில் மகா கும்பாபிஷேக பெருவிழா

புதுச்சேரியில் கர்ப்பிணியிடம் நகை பறிக்கும் வீடியோ வைரல்…