in

புதுச்சேரி எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

புதுச்சேரி எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சி

 

புதுச்சேரி எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியில் மாணவர்களின் ராக்கெட் இயக்கம், உணவு பொருட்களின் கலப்படங்களை கண்டறிவது, தெர்மாகோல் மறுசுழற்சி செய்வது உள்ளிட்ட படைப்புகள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

புதுச்சேரி சாரம் தென்றல் நகரில் உள்ள எஸ்.ஆர்.சுப்ரமணியம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி அளவிலான அறிவியல் கண் காட்சி நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் அனிதா அனைவரையும் வரவேற்று இக்கண்காட்சியின் முக்கியத்துவமும் படைப்புகளையும் விளக்கி கூறினார்.

புதுச்சேரி கல்வித்துறை பெண்கள் கல்வி இணை இயக்குனர் சிவராம ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்காட்சியை துவக்கி வைத்து  பார்வையிட்டார்.

இக்கண்காட்சியில் இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதவியல் மற்றும் சுற்றுச்சூழல் சம்பந்தமான பல படைப்புகளை மாணவர்கள் காட்சிப்படுத்தி அதற்கான விளக்கங்களையும் கூறியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதில் ராக்கெட் செயல்திறன் எவ்வாறு செயல்படுகிறது, இயற்கையை பாதிக்கும் தெர்மாகோளை எவ்வாறு மறுசுழற்சி செய்து அதனை பொம்மை செய்ய பயன்படுத்துவது, லேசர் லைட் மூலம் இசைக்கேற்ப லேசர் ஒலியை நடனமாட வைப்பது, மனித உடல் பாக இயக்கங்கள், உணவு பொருட்களில் உள்ள கலப்படங்களை எவ்வாறு கண்டுபிடிப்பது போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிபடுத்தப்பட்டிருந்தனர்.

சிறந்த படைப்புகளுக்கு நடுவர்களினால் தீர்வு செய்யப்பட்டு பரிசளித்து கௌரவிக்கப்பட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர்கள் அனுராதா, மல்லிகா, காண்டீபன், ஜெயலட்சுமி மற்றும் சக ஆசிரியர்கள் சிறப்பாக செய்திருந்தனர். உடற்கல்வி ஆசிரியர் சந்திரசேகரன் முன்னிலையில் விழா நடைபெற்றது.

What do you think?

43 நாட்களில் நிறைந்த நிலையில்காணிக்கை வரவு ரொக்கம் ரூபாய் ஐந்து கோடியை தாண்டியது

ஶ்ரீ சசிவர்னேஸ்வரர் திருக்கோவிலில் துர்க்கை அம்மனுக்கு ஐப்பசி மாத சிறப்பு அலங்கார ஆராதனை