in

தரங்கம்பாடி பூம்புகார் பகுதிகளில் தொடரும் கடல் சீற்றம்

தரங்கம்பாடி பூம்புகார் பகுதிகளில் தொடரும் கடல் சீற்றம்

 

தரங்கம்பாடி பூம்புகார் பகுதிகளில் தொடரும் கடல் சீற்றம், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை எச்சரிக்கை எதுவும் விடுக்காத மீன்வளத்துறை அலட்சியம்.

வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்று சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. மேலும் தரங்கம்பாடி பூம்புகார் சந்திரபாடி சின்னூர்பேட்டை வானகிரி சின்னங்குடி உள்ளிட்ட 28 மீனவ கிராமங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதன் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்க செல்லவில்லை கடலுக்குள் ஏற்கனவே மீன் பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் திரும்பி வந்து கொண்டிருக்கும் நிலையில், மீன்வளத்துறை சார்பில் எந்த எச்சரிக்கையும் மீனவர் கிராமங்களுக்கு இதுவரை அளிக்கப்படவில்லை.

இதன் காரணமாக குழப்பமான நிலையில் ஒரு சில மீனவர்கள் சீற்றத்தை பொருட்படுத்தாமல் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். தற்போது மிதமான காற்று வீசி வரும் நிலையில் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக துறைமுகங்கள் மற்றும் கரைகளில் நிறுத்தியுள்ளனர்.

What do you think?

காற்று சுழற்சி காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை

மயிலாடுதுறையில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்