in

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு


Watch – YouTube Click

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு

 

திருவெறும்பூர் அருகே உள்ள குண்டூரில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் துவக்க பள்ளியில் நடைபெறும் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம், கால்நடை மருத்துவமனை, நவல்பட்டு காவல் நிலையம் மற்றும் அருகே உள்ள நவல்பட்டு தீயணைப்பு நிலையம், ஊராட்சி அலுவலகம், நியாய விலை கடை ஆகியவற்றை திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் ஆய்வு செய்தார்.

தமிழக அரசு பொது மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல் படுத்தி இருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஊராட்சியாக மாவட்ட கலெக்டர்கள் சென்று அங்கு ஒரு நாள் தங்கி இருந்து அந்த ஊராட்சியில் உள்ள பல்வேறு திட்ட செயல்பாடுகள், பொது மக்களின் தேவை, ஆகியவற்றை கண்டறிந்து அதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக திருச்சி கலெக்டர் பிரதீப் குமார் இன்று திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள குண்டூர் ஊராட்சி, நாள்பட்டு ஊராட்சி, வேங்கூர் ஊராட்சி மற்றும் திருச்சி மாநகராட்சி 40 வது வார்டு திருவெறும்பூர் மூப்பனார் நகர் பகுதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் இன்று காலை 9 மணி முதல் நாளை காலை 9 மணி வரை பொதுமக்களில் குறைகளை கேட்பதுடன் அந்த பகுதிகளில் நடைபெற்று வருகிறது பல்வேறு பணிகள் அரசின் பல்வேறு துறை அலுவலகங்களை ஆய்வு செய்கிறார்.

அதன் ஒரு பகுதிய குண்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவளர்ச்சி பட்டியல் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்ததோடு மாணவர்களுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டு கலந்துரையாடினார்.

பின்னர் குண்டூரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் கால்நடைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு மற்றும் கால்நடைகளுக்கு தேவையான மருந்து இருப்பு விவரம் குறித்து கேட்டறிந்தார்.

அதன் பிறகு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு சென்று ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார்.

பின்னர் நியாய விலை கடை சென்றவர் பொருள்களின் தரம், பொட்களின் எடை, பொருள்களின் இருப்பு மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து நவல்பட்டு காவல் நிலையத்தை ஆய்வு செய்ததோடு மட்டுமன்றி பதிவேடுகள் குற்ற ஆவணங்கள் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வாளரிடம் கேட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் நவல்பட்டு காவல் நிலையம் அருகே உள்ள நவல்பட்டு தீயணைப்பு நிலையத்திற்கு சென்று அங்குள்ள தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்தார்.


Watch – YouTube Click

What do you think?

சாராயக்கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எஸ்.பி. வம்சித ரெட்டி கடும் எச்சரிக்கை

மைசூர் மயிலாடுதுறை விரைவு ரயில் வண்டியை கடலூர் வரை நீடித்து இயக்கம்