இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
தஞ்சை பனகல் மாளிகையில் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி சென்னை DPI இல் தொடர் முற்றுகை போராட்டம் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்களால் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக வின் தேர்தல் அறிக்கை 311 இல் கூறியவாறு சம வேலை சம ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
திமுக வின் தேர்தல் அறிக்கை எண் 311 இல் 20000 ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியத்தில் இருப்பவர்களுக்கு காலமுறை ஊதியமாக மாற்றி கொடுப்போம் என்ற தேர்தல் அறிக்கைகாக தான் நாங்கள் திமுக விற்கு ஆதரவு தெரிவித்தோம்.
தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படவில்லை என்று தெரிந்ததும் போராட்டத்தை கையில் எடுத்தோம். உண்ணாவிரத போராட்டத்தை கையில் எடுத்த போது அதன் முடிவில் மூவர் குழு அமைத்து அதன் அறிக்கையை கொண்டு தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்படும் என கூறினர்.
ஒரு வருட காலம் ஆகியும் மூவர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்தோம் அப்போது அரசு சார்பில் இன்னும் மூன்று மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு அதன்படி கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று கூறினார்.
ஐந்து மாதங்கள் ஆகியும் இன்றுவரை மூவர் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்படாத நிலையில் மீண்டும் போராட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.
நாங்கள் கேட்பது ஊதிய உயர்வு அல்ல உரிய ஊதியம் வழங்க வேண்டும் என்று தான் கூறுகிறோம்.
இன்று பணியில் சேர்ந்தவர்களுக்கும் பல ஆண்டுகளாக பணிபுரியும் எங்களுக்கும் 20 ஆண்டுகளுக்கு மேல் ஊதிய முரண்பாடு இருந்து வருகிறது எனவும்
இந்த ஊதிய முரண்பாடு களைய வேண்டிய ஒன்று என்று திமுக அரசுக்கும் தெரியும் அதனால்தான் தேர்தல் அறிக்கையில் அதனை சேர்த்து இருந்தனர் அந்த தேர்தல் அறிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை வைத்து பிப்ரவரி 19ஆம் தேதியிலிருந்து சென்னையில் முற்றுகை போராட்டம் நடத்தி வந்தோம் அதில் தினம் தினம் கைது செய்யப்படும் ஆசிரியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தொடர் போராட்டமாக தமிழகம் முழுவதும் உள்ள இடைநிலை ஆசிரியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தி வருகின்றோம் என ஆசிரியர் கூட்டமைப்பிலிருந்து சிலம்பரசி இடைநிலை ஆசிரியர் அவர்கள் கூறினார்.