in

தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்


Watch – YouTube Click

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு என்னும் மையமான ஏவிசி கல்லூரியில் காப்பறையில் வைக்கப்பட்டு தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் பூட்டி சீல் வைப்பு. மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 300 வெப் கேமராக்கள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையம் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். இந்த தேர்தலில் 70. 06 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. ஒரு வாக்கு சாவடிக்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரம் என மொத்தம் 3486 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்கு பெட்டிகள் அனைத்தும் மயிலாடுதுறை அருகே உள்ள மன்னம்பந்தல் ஏ வி சி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்கு என்னும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆறு சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பெட்டிகள் தனித்தனியாக ஆறு வாக்கு என்னும் மையம் அமைக்கப்பட்டு காப்பறைகளில் வைக்கப்பட்டது.

தொடர்ந்து இன்று தேர்தல் பொது பார்வையாளர், திரு.கன்ஹீராஜ் ஹச் பகதே, தேர்தல் நடத்தும் அலுவலர் ஏ. பி.மகாபாரதி தலைமையில் வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒவ்வொரு சட்டமன்றத்திற்கான வாக்கு பெட்டிகள் உள்ள காப்பறைகள் தனித்தனியாக பூட்டி சீல் வைக்கப்பட்டது. துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை போலீசார் உள்ளிட்ட மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு வாக்கு என்னும் மையத்தை சுற்றி 300 வெப் கேமராக்கள் வைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் வாக்கு பெட்டிகள் பாதுகாப்பாக இருப்பதை நேரடியாக எல்இடி திரையில் பார்க்கும் வகையில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

திரையரங்கில்18 படிகள் அமைத்து பஜனை செய்து வழிபாடு

பிரதமர் மோடி சந்திப்பை ஒத்தி வைத்த எலான் மஸ்க்