in

மக்களை தேடி மருத்துவ முகாம் 4 – ஆண்டு துவக்க விழா

மக்களை தேடி மருத்துவ முகாம் 4 – ஆண்டு துவக்க விழா

 

மக்களை தேடி மருத்துவ முகாம் 4 – ஆண்டு துவக்க விழாவில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

தமிழகத்தில் மக்களை தேடி மருத்துவ முகாம் தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்த நான்காம் ஆண்டு தொடங்கி உள்ளது.

இதனை சிறப்பிக்கும் விதமாக இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பொது மக்கள் பயன்பெறும் வகையில், சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமினை மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

முகாமில் இரத்த அழுத்தம், இரத்த பரிசோதனை மற்றும் மருத்துவம் சார்ந்த அறிவுரைகள் வழங்கப்பட்டது. முகாமில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 3 ஆண்டுகளாக சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் ஆகியோர் சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

இந்நிகழ்ச்சியில் அரசு துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

What do you think?

நெல்லை மாநகராட்சி புதிய மேயராக 25 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கோ.ராமகிருஷ்ணன் தேர்வு

திருவாரூரில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம்