சம்மனை கிழித்த சீமான் வீட்டு காவலாளி கைது….
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் இயக்குனராக இருக்கும் பொழுது நடிகை விஜயலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிய நிலையில் விஜயலட்சுமி வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது சம்பந்தமாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நீதிமன்றம் போலீசருக்கு உத்தரவிட்ட நிலையில் விஜயலட்சுமியை விசாரித்த போலீசார் அவரிடம் இருந்து பல ஆதாரங்களை கைப்பற்றி பிறகு சீமானை விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் கடந்த 24ஆம் தேதி அவருக்கு சம்மன் அனுப்பினர்.
ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் சீமான் வெளியூர் சென்றிருப்பதாகவும் அவர் நான்கு வார கால அவகாசங்கள் வேண்டும் என்றும் போலீசாரிடம் கடிதம் கொடுத்தனர். இதனையடுத்து நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டின் கதவில் சம்மன் ஓட்டப்பட்டது.
போலீசார் சம்மன் ஒட்டிய சிறிது நேரத்திலேயே அந்த வீட்டில் வேலை செய்யும் பணியாளர் ஒருவர் கிழித்த காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதும் போலீசார் சீமான் வீட்டுக்கு சென்ற போது இன்ஸ்பெக்டர் மற்றும் காவலாளிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட, பொலிசாரை உள்ளே விட மறுத்தனர்.
இதனால் காவலாளியை இன்ஸ்பெக்டர் கைது செய்ய முயன்ற போது போலீசார் உடன் மல்லு கட்டினார் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான மோதலால் இன்ஸ்பெக்டர் மற்றும் காவலாளிகள் அமல்ராஜ் சட்டையை பிடித்து இழுத்து வந்து ஜிப்பில் ஏற்றினர்.
திடீரென்று அமல்ராஜ் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை தலைக்கு மேல் தூக்கியதால் பதக்கமடைந்த போலீசார் சிறு போராட்டத்திற்கு பிறகு துப்பாக்கியை அவரிடம் இருந்து பறித்தனர்.
சம்மன்னை கிழித்ததாக அமல்ராஜ் மீதும் உடன் இருந்த பணியாளர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.