ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட தங்க நகைகள் பறிமுதல்
விருதுநகரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ 400 வெள்ளி என மொத்தம் 11 கிலோ 413 கி எடையுள்ள பொருட்கள் பறிமுதல் : கருவூலத்தில் ஒப்படைப்பு
மதுரையிலிருந்து நாகர் கோவிலுக்கு உரிய ஆவணமின்றி பல்வேறு நகைகடைகளுக்கு தனியார் ஏஜென்சி வாகனத்தில் கொண்டு சென்ற 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ 400 கிராம் வெள்ளி உள்ளிட்ட மொத்தம் 11 கிலோ 413 கி எடையுள்ள 4 கோடி 9 லட்சத்து 87 ஆயிரத்து 717 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது
விருதுநகர் சத்திரெட்டியாபட்டி விலக்கு அருகே பறக்கும் படை அதிகாரி நடராஜன் (துணை இயக்குநர் தோட்டக்கலை) தலைமையில் தலைமையில் சிறப்பு சார்பு ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர்கள் முருகன், முதல்நிலைக் காவலர் சீனிவாசன், தனலட்சுமி ஆகிய குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர் .
அப்போது அவ்வழியே வந்த தனியார் கூரியர் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
மதுரையில் உள்ள தனியார் கூரியர் ஏஜென்ஜி மூலம் கிலோ தங்க நகைகளை நாகர்கோவில் மற்றும் மார்த்தாண்டம் பல்வேறு நகை கடைகளுக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர். ஆனால் உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை.
இதனையடுத்து நகைகள் கொண்டு வரப்பட்ட பார்சல்களில் இருந்த 7 கிலோ தங்க நகைகள் மற்றும் 4 கிலோ 400 கிராம் வெள்ளி உள்ளிட்ட 4 கோடி 9 லட்சத்து 87 ஆயிரத்து 717 ரூபாய் மதிப்பிலான பறிமுதல் செய்யப்பட்டு பவிருதுநகர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
பின்னர் நகைகள் விருதுநகர் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.