in

சாத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் | Seizure of money


Watch – YouTube Click

சாத்தூர் பகுதியில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட 3 லட்சத்தி 55ஆயிரம் பணம் பறிமுதல்

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சாத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி மைய உதவி பயிற்சி அலுவலர் சஞ்சய்காந்தி தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சாத்தூர்- தாயில்பட்டி சாலையில் உள்ள ஊஞ்சம்பட்டி விளக்கில் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது தனியார் நிதி நிறுவனத்தில் பணியாற்றும் பிச்சைமணி(25)என்பதும் இவர் திருமங்கலத்தில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஏஜெண்டாக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையைடுத்து இவரிடம் இருந்து உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதே போன்று கோபாலபுரம் பகுதியில் வெம்பக்கோட்டை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கரலிங்கம் தலைமையிலான தேர்தல்பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் கோதைநாச்சியார்புரத்தை சேர்ந்த விஷ்ணுசங்கர்(35)அவரிடமிருந்து 2 லட்சத்து 35 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.மேலும் உரிய ஆவணம் என்று இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்தனர்.மேலும் இரண்டு இடங்களிலும் பறிமுதல் செய்யப்பட்ட ரூபாய் 3 லட்சத்து 55 ஆயிரம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் சிவக்குமாரிடம் ஒப்படைத்தனர்.


Watch – YouTube Click

What do you think?

எனக்கு நானே ஓட்டு போட மாட்டேன்; மக்களிடம் எதுக்கு ஓட்டு கேட்கனும்

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் இருக்கைகள் இல்லாததால் பரபரப்பு