in

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு


Watch – YouTube Click

தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வு
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் போலீசார் சார்பில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கான தன்னம்பிக்கை விழிப்புணர்வினை ஆய்வாளர் ராஜ்குமார் மாணவர்களுக்கு நடத்தினார்.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிந்துஅதன் ரிசல்ட் வெளியானது. இதில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு லிங்கா ரெட்டிப்பாளையம் பள்ளியில் தேர்வில் வெற்றி பெறுவது குறித்து தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருக்கனூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார்  தோல்வியடைந்த மாணவர்கள் சோர்வடையாமல் மன அழுத்தம் இன்றி தன்னம்பிக்கையுடன் மீண்டும் படித்து வரும் கல்வி ஆண்டிலேயே பிளஸ் 1 வகுப்பில் சேர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என பேசினார்.
மேலும் தேர்வில் வெற்றி பெற தேவையான அனைத்து உதவிகளையும் போலீசார் செய்து தர தயாராக உள்ளதாக கூறினார்.
சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் உடனே நடக்கும் மறுதேர்வில் தேர்ச்சி அடையும் மாணவர்கள் அனைவருக்கும் பிளஸ் 1 சேர்க்கைக்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தார்.
இதற்கு தோல்வியடைந்த மாணவர்கள் வரும் மறுதேர்வில் நிச்சயம் வெற்றி பெற்று இந்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் சேர்வோம் என உறுதி அளித்தனர்.
தன்னம்பிக்கை விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காட்டேரி குப்பம் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட மாணவர்கள் கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

ஒரே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் ஆறு அடி உயர்வு

காட்டு யானைகள் வழித்தடத்தை அடைக்கப்பட்டதால் ஊருக்குள் நுழைந்தது