கொடைக்கானல் தூண் பாறை பகுதியில் வனத்துறை சார்பில் கோடை சீசனுக்கு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் ‘செல்ஃபி பாயின்ட்’ அமைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் குணா குகை, மோயர் சதுக்கம், தூண் பாறை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் வனத்துறையின் கட்டுப் பாட்டில் உள்ளன. இங்கு வார விடுமுறை நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் வருகின்ற கோடை சீசனுக்கு சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வகையில் வனத்துறை சார்பில் ‘ காடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வனத்துறை சார்பில் தூண் பாறை பகுதியில் ‘ஐ லவ் பாரஸ்ட் கொடைக்கானல்’ என்ற வாக்கியத்துடன் கூடிய செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டு நேற்று முதல் சுற்றுலாப்பயணிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த செல்ஃபி பாயின்ட் பின் புறத்தில் உள்ள இரண்டு தூண் பாறைகளின் ரம்யமாக காட்சி அளிக்கும் வகையில் இந்த செல்ஃபி பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து இன்று இந்த தூண்பாறை பகுதியில் வந்திருந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமாக இந்த செல்ஃபி பாயின்டில் புகைப் படம் மற்றும் செல்ஃபி எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.