நாகை இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை
நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வெற்றி பெற்ற செல்வராஜ் திருவாரூரில் பெரியார், அண்ணா, கலைஞர் திருவுருவ சிலைகளுக்கு திறந்த வாகனத்தில் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் போட்டியிட்ட வை செல்வராஜ் 4 இலட்சத்து 65 ஆயிரத்து 44 வாக்குகள் பெற்று அதிமுக சார்பில் போட்டியிட்ட சுர்ஜித் சங்கரை 2 இலட்சத்து 8 ஆயிரத்து 957 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
தொடர்ந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் அமைந்துள்ள தந்தை பெரியார் திருவுருவ சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் வெற்றி வேட்பாளர் செல்வராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து காட்டூர் கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அங்கிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் திமுக நகர செயலாளர் பிரகாஷ் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் சேகர் என்கிற கலியபெருமாள் திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.