in

செஞ்சி போத்துவாய் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா

செஞ்சி வட்டம் போத்துவாய் முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் .

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகா போத்துவாய் கிராமத்தில்சர்வ சக்தி விநாயகர், முத்துமாரியம்மன், பாலசுப்பிரமணிய சுவாமி மற்றும் நவகிரக உள்ளிட்ட பரிவார மூர்த்தி களுக்கு ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு 18ஆம் தேதி மாலை மங்கல இசை,விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா பூர்ணாஹூதி,மகா தீபாராதனை நடைபெற்றது

இரவு 7.30 மணிக்கு வாஸ்து சாந்தி, பிரவேச பலி, அங்குரார்ப் பணம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால பூஜை நடைபெற்றது. இரவு 9 மணிக்கு முதல் கால பூர்ணாஹூதி,மகாதீபாராதனின் நடைபெற்றது.

19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜைகளும் சிவபிம்பங்களுக்கு ரக்ஷா பந்தனமும், தத்துவர்ச்சனை, நாடி சந்தானமும் நடைபெற்றது.

தொடர்ந்து இரண்டாம் கால மகாபூர்ணாஹூதி,தீபாராதனையும் யாத்திர தானம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.இதையடுத்த முத்துமாரியம்மன் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் .விழாவிற்கான ஏற்பாடுகளை அனைத்து உபயதாரர்கள், விழா குழுவினர்கள், இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்..

What do you think?

திருச்சி புலிவலம் பிரதான சாலை நிவாஸ் நண்பா்களான இரு சிறாா்களுடன் இருசக்கர வாகனத்தில் வீலிங் சாகசம் போலீஸாா் வழக்கு பதிவு

திருமங்கலக்குடியில் உள்ள அருள்மிகு புத்துமாரியம்மன், ஆலயத்தில் ஆடி திருவிழா