செஞ்சி அரசு இ சேவை மையத்தில் கூடுதல் கட்டணம் பொதுமக்கள் புகார் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் செஞ்சி கோட்டை சுற்றுலா மையம் திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
பின்னர் வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட அண்ணாமலை நகரில் வசிக்கும் நரிக்குறவர் மக்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கியும், தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கட்டுவதற்கு இடம் அளந்து தராமல் இருப்பதால் நரிக்குறவர் மக்கள் செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியரிடம் வீடு கட்ட நிலம் அளவு செய்து எங்களுக்கு இட ஒதுக்கீடு செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில்,
இன்று மாலையே உங்களுக்கு இடம் அளந்து இடம் தேர்வு செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதி அளித்தார்.பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
பின்னர் அருகில் இருந்த இ சேவை மையத்தில் மாவட்ட ஆட்சியர் பழனி திடீர் ஆய்வு செய்தார்.செஞ்சி வட்டாட்சியர் அலுவலகத்திற்குள் அரசு இ சேவை மையம் இயங்கி வருகிறது.இங்கு வரும் பொதுமக்களிடம் பதிவு செய்வதற்கான கட்டணங்களை அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதும்,
இறப்பு சான்று, ஜாதி சான்று வருமானச் சான்று பட்டா மாற்றம், உள்ளிட்ட சான்றுகள் வழங்க இ சேவை மையத்தில் பதிவு செய்ய வருபவர்களை தரக்குறைவாக பேசுவதும்,பதிவு செய்ய மறுப்பதும், இ சேவை மையத்தில் பணிபுரியும் பணியாளர்கள் தொடர்ந்து செய்து வருகின்றனர் என
பொதுமக்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் பழனியிடம் புகார் தெரிவித்தனர்.
இது குறித்து நேரில் ஆய்வு செய்து விசாரணை செய்த மாவட்ட ஆட்சியர் பழனி பணியாளர்களை எச்சரித்தார்.
அப்பொழுது அங்கிருந்த பொதுமக்கள் ஆட்சியரிடம் அடுக்கடுக்கான புகார்களை தெரிவித்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
ஆய்வின் போது திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம்.
மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஜெய் நாராயணன், தாசில்தார் ஏழுமலை, ஆகியோர் உடன் இருந்தனர்.