செஞ்சி மாநகரின் ஈசான மூலையில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி உடனுறை காசி விசுவநாதர் கோயிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை வளர்பிறை பிரதோஷ விழா ..
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பேரூராட்சிக்குட்பட்ட சிறுகடம்பூர் பகுதியில் அமைந்துள்ள சித்தர்கள் வழிபாடுகள் செய்த 1200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான திருத்தலம் என கூறப்படும் ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை வளர்பிறை பிரதோஷ பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது.
நேற்று மாலை நந்தியன் பெருமானுக்கு பால் தயிர் சந்தனம் விபூதிபஞ்சாமிர்தம் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடைபெற்றதுபூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது.
முன்னதாக காசி விஸ்வநாதருக்கு பால், தயிர்,சந்தனம்,விபூதி பஞ்சாமிர்தம் போன்ற திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பலவகை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
செஞ்சி மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் இருந்து
ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று இந்த திருக்கோவில் திருப்பணி நடைபெற வேண்டி மனம் உருகி ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய என கோஷங்கள் எழுப்பி சிவபுராணம் பாடியவாறு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு,சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவர் சிவன் பார்வதி சுவாமிகளுக்கும்,பிரதோஷ நாயகருக்கும் மகா தீபா ஆராதனை காட்டப்பட்டது.
சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் அறக்கட்டளை நிர்வாகிகள், சிவதொண்டர்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.