செஞ்சிக்கோட்டை ஸ்ரீகமலக்கன்னியம்மன் ரத உற்சவ கொடியேற்றம்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டை மலையின் மீது அமைந்துள்ள ஸ்ரீகமலக்கன்னியம்மன் ஆலய சித்திரை மாத ரத உற்சவத்தை முன்னிட்டு கொடியேற்றம் நிகழ்ச்சி கலசங்கள் வைத்து யாகங்கள் முழங்க வெகு விமர்சியாக நடைபெற்றது.
செஞ்சிக்கோட்டை மலை மீது அருள்பாலித்து வரும் ஸ்ரீ கமலக்கன்னியம்மன், மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீராஜகாளியம்மன், ஸ்ரீமகாமாரியம்மன், கோட்டை வீரப்பன், ஆகிய தெய்வங்களுக்கு சித்திரை மாத ரத உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 22}5}2024 வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
விழாவை முன்னிட்டு கொடி மரத்திற்கும் மூலவர் அம்மன் ஸ்ரீ மகா மாரியம்மன் க்கு பால் தயிர் விபூதி சந்தனம் தேன் போன்ற வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் தீப ஆராதனையும் நடைபெற்றது.
இரவு பனமலை தாளகிரீஸ்வரர் கைலாய வாத்திய குழுவினரால் சிவவாத்தியம் முழங்க அம்மன் திருவீதியாலா நடைபெறுகிறது.
15}ம்தேதி இரவு அன்னதானமும், முத்துபல்லக்கில் அம்மன் திருவீதியுலா நடைபெறுகிறது.
16}ம்தேதி இரவு 10 மணிக்கு அம்மன் திருவீயுலாவும், அன்னதானம் மற்றும் தெருக்கூத்து நடைபெற உள்ளது.
17}ம்தேதி இரவு 10 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதியுலா காட்சியும், மேடை நாடகமும் நடைபெற உள்ளது.
18}ம்தேதி மந்தைவெளி திடலில் அன்னதானமும், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அம்மன் திருவீதியுலா காட்சி நடைபெறுகிறது.
19}ம் தேதி பச்சை காளி பவளகாளி அம்மன் வேடமும், இரவு வானவேடிக்கயுடன் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.
20}ம்தேதி இரவு அம்மன் திருவீதியுலா காட்சியும் நடைபெறுகிறது.
21}ம்தேதி நிகழ்வின் முக்கிய திருவிழாவான திருத்தேர்விழா நடைபெற உள்ளது. அன்று காலை மந்தைவெளி திடலில் இருந்து 108 பால்குடம் ஊர்வலம் எடுத்துச்செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற உள்ளது.
காலை 10 மணிக்கு கூழ்வார்த்தல் நிகழ்ச்சியும, பகல் 2.30 மணிக்கு மேல் சிவவாத்தியத்துடன் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
22}ம்தேதி மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் அரங்க.ஏழுமலை, உபயதாரர்கள், கிராமபொது மக்கள், இளைஞர்கள் செய்து வருகின்றனர்.