in

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் செங்காவி ஓவியங்கள்


Watch – YouTube Click

தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் செங்காவி ஓவியங்கள்

 

மன்னர்கள் காலத்தில் 3000 ஆண்டுகளுக்கு முன்பு வேலம் பிசினி,முட்டை வெள்ளை கரு, இளநீர், செம்மண் போன்றவைகளால் வரையப்பட்ட செங்காவி ஓவியங்கள்

மெல்ல மெல்ல அழிந்து வரும் செங்காவி ஓவியங்களை பாதுகாப்பதோடு அடுத்த தலைமுறையினருக்கும் கொண்டு செல்ல விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஓவிய கலைஞர்கள் அரசுக்கு கோரிக்கை

கலை என்றவுடன் நினைவிற்கு வருபவர்கள் பல்லவ மன்னர்கள் தான் காஞ்சிபுரம் மற்றும் மாமல்லபுரத்தில் அவர்களுடைய கலையின் ஈடுபாட்டைக் காணலாம் அந்த வரிசையில்
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய மனிதர்கள் வரைந்த செங்காவி ஓவியம் இன்றளவும் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது.

இதில் மனிதர்களது முகங்கள் விலங்கின் முகங்கள், விலங்கு போன்று வேடம் அணிந்து ஆடுதல்,வேட்டையாடுதல், சடங்குகளை பிரதிபலிக்கும் ஓவியங்கள், குதிரையின் மீது மனிதர்கள் அமர்ந்து செல்வது போன்ற செங்காவி ஓவியங்கள் இன்றளவும் புகழ் பெற்றவைகளாக கருதப்படுகிறது

இந்த சுவர் ஓவியங்கள் திருக்கோயில்கள் அரண்மனைகள் பாரம்பரியமிக்க கட்டிடங்கள் ஆகியவற்றைகளில் காணமுடிகிறது. இதன் மூலம் தமிழர்களை ஆண்ட மன்னர்களின் ஈடுபாடுகளை அறிய முடியும்.

ஆனால் தொழில் நுட்பங்கள் வளர செங்காவி ஓவியங்கள் மெல்ல மெல்ல அழிந்து வருகிறது

செம்மண், வேலம்பிசினி, முட்டை வெள்ளை கரு, இளநீர்,புளியங்குச்சியின் கறி தூள், ஆகியவை கொண்டு வரையப்பட்ட செங்காவி ஓவியங்கள் இன்று தொழில்நுட்பத்தின் மூலமாக மறைந்து பல்வேறு வண்ணங்களில் பயன்படுத்தும் பெயிண்ட் கடை கொண்டு ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. எனவே மன்னர்கள் ஆண்ட காலத்தில் வரையப்பட்ட செங்காவி ஓவியங்களை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வில்லியனூர் அரசசூரை சேர்ந்த செங்காவி ஓவிய கலைஞர் வி.கே.துரை புதுச்சேரி முருங்கப்பாக்கம் கலை மற்றும் கைவினை கிராமத்தில் செங்காவி ஓவியங்களை பாதுகாத்து வருகிறார். அதாவது தலைவர்களின் சிலை மனிதர்களின் முகங்கள் விலங்குகளின் முகங்கள் பண்டைய மன்னர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட உருவங்கள் என அனைத்தையும் வரைந்து பாதுகாத்து செங்காவி ஓவியங்கள் குறித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறார்.

இது குறித்து செங்காவி ஓவியக் கலைஞர் வி. கே. துரை கூறும்போது…

உலகப் புகழ்பெற்ற செங்காவி ஓவியங்கள் குறித்த விழிப்புணர்வை அடுத்த தலைமுறையினருக்கும் அரசு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

செம்மண், வேலம்பிசினி, முட்டை வெள்ளை கரு, இளநீர், புளியங்குச்சியின் கறி தூள், ஆகியவைகளை பயன்படுத்தி வரையப்பட்ட செங்காவி ஓவியங்கள், மெல்ல மெல்ல மறைந்து, நவீன ஓவியங்களை மாணவர்கள் அதிக அளவில் கற்று வருகிறார்கள்,

அதே போன்று செங்காவி ஓவியங்களை கற்றுக் கொள்ளவும் மாணவர்கள் முன்வர வேண்டும் அது மட்டுமல்லாமல் செங்காவி ஓவியங்கள் குறித்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்ல விழிப்புணர்வை அரசு ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

பழங்காலங்களில் கோவில் விதானங்களில் மட்டுமே வரையப்பட்ட இந்த ஓவியம் குறித்து தற்போது விழிப்புணர்வு இல்லை, வீடுகளிலும் இந்த ஓவியங்கள் வரையப்படுகிறது என்று குறிப்பிட்ட அவர் செங்காவி ஓவியம் என்பது சுவாசிக்கும் தன்மை உடையது அதாவது வெயில் நேரங்களில் விரிசல் விட்டும் குளிர் காலங்களில் அந்த விரிசல்கள் மூடியும் பிரமிக்க வைக்க கூடிய அளவுக்கு செங்காவி ஓவியங்கள் உள்ளது என்று குறிப்பிட்டார்.

சினிமாவில் பழைய காலங்கள் ஓவியங்கள் குறித்து எடுக்கும் படங்களுக்கு பல்வேறு வகை செங்காவி ஓவியங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எனவே இதுகுறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.


Watch – YouTube Click

What do you think?

சூட்சமபுரீஸ்வரர் கோயிலில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம்

50 லட்சம் மதிப்புள்ள சொத்தை போலி கையெழுத்திட்டு அபகரித்த உறவினர்கள்