திரைப்பட தயாரிப்பாளர் மீது பரபரப்பு நடிகை புகார்
பிரபல இந்தி நடிகை அங்கிதா மறைந்த நடிகர் சுஷாந்தை காதலித்து பின்னர் பிரிந்தவர்.
அதன் பின்னர் வி கே ஜெயன் என்ற தொழிலதிபரை திருமணம் செய்தார்.
இவர் தற்பொழுது தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்து இருக்கிறார். இவர் தற்பொழுது பீர் சாவர்க்கர் என்ற படத்தில் நடிக்கிறார். தற்பொழுது அவர் பரபரப்பாக வைத்துதுள்ள குற்றச்சாட்டு ஆவது நான் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது தென்னிந்திய படத்தில் நான் முதன் முதலில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டேன். அப்பொழுது எனக்கு வயது 19 என்னை ஒப்பந்தத்தில் கையெழுத்து போட நேரில் வருமாறு அழைத்தனர்.
இந்த படத்திற்கு நீ தான் கதாநாயகி என்று கூறிய தயாரிப்பாளர் என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார் அதிர்ச்சி அடைந்த நான் அவருக்கு மறுப்பு தெரிவித்தேன். இதை போல் அவர் பல தடவை என்னிடம் தவறாக நடக்க முற்பட்டார். இதை நினைக்கும் போது எனக்கு வருத்தமாக இருக்கிறது. அதிகமாக பணம் கொடுப்பதாக கூட என்னை மிரட்டியும் இருக்கிறார் என்று தற்பொழுது அவர் மேல் புகார் அளித்துள்ளார் நடிகை அங்கிதா.