in

வீடு தேடி வந்த விஜய்யை பார்க்காமல் திருப்பி அனுப்பிய சீரியல் நடிகர் சஞ்சீவ்

வீடு தேடி வந்த விஜய்யை பார்க்காமல் திருப்பி அனுப்பிய சீரியல் நடிகர் சஞ்சீவ்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகு அவர் சம்பந்தப்பட்ட எல்லோரிடமும் அவரின் அரசியல் வருகை குறித்து தளபதி விஜய்யை பற்றியும் கேட்கப்பட்டது.

நடிகரும் விஜய்யின் நண்பருமான சஞ்சீவ் அவர்களை தொடர்பு கொண்ட போது விஜய் பற்றி சில விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார். வீடு தேடி தன்னை பார்க்க வந்த விஜய்யை தான் எதனால் பார்க்காமல் திருப்பி அனுப்பினேன் என்று ஃபீல் பண்ணி கூறினார்.

கொரோனா காலகட்டத்தை யாராலும் மறக்க முடியாது உச்சியில் இருந்தவர்கள் கூட தங்கள் வாழ்க்கையை இழந்து நடுத்தெருவில் வந்து விட்டார்கள் நான் கொரோனாவுக்கு பயந்து வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்தேன் என் அடிப்படை தேவைகளுக்கு கூட நான் வெளியே செல்லவில்லை.

அந்த நேரத்தில் திடீரென்று எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது, என் மனைவி மற்றும் குழந்தைகளை எனது மாமியார் வீட்டிற்கு அனுப்பி வைத்துவிட்டு நான் தனியாக வீட்டில் இருந்தேன்.

அப்பொழுது திடீரென்று எனக்கு கால் பண்ணிய விஜய்யிடம் எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கூறி இருந்தேன். அதற்கு அவர் சாப்பாட்டுக்கு என்ன செய்கிறாய் தனியாக இருக்கிறாயா என்று கேட்டார் நான் அதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி ஃபோனை வைத்து விட்டேன்.

15 நிமிடம் கூட ஆகி இருக்காது திடீரென்று என் வீட்டு வாசலில் ஒரு கார் வந்து நின்றது யார் என்று நான் எட்டிப் பார்த்த பொழுது விஜய் அதிலிருந்து இறங்கி வந்தார் மனைவி வீட்டில் இல்லை சாப்பாட்டுக்கு என்னடா பண்ணுவ உன்னால மேனேஜ் பண்ண முடியாது என்றுதான் நான் எடுத்து வந்தேன் என்று கூறிய போது எனக்கு சந்தோஷமாக இருந்தாலும் நான் விஜய்யை’ வீட்டுக்குள் விடவே இல்லை கேட்டில் இருக்கும் எனது செக்யூரிட்டியிடம் சாப்பாட்டை கொடுத்துவிட்டு நீ அப்படியே செல் என்று அவனை பார்க்காமல் அனுப்பி வைத்து விட்டேன்.

அவர் வீட்டுக்குள் வந்தால் அவருக்கும் தொற்று ஏற்படும் என்றுதான் அப்படி நான் செய்தேன் என்று சஞ்சீவி கூறியுள்ளார்.

நடிகர் சஞ்சீவ் தற்பொழுது வானத்தைப்போல என்ற சீரியலில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் விஜய்யை அப்படியே அட்டகாப்பியடித்து நடிப்பதாக ரசிகர்கள் அவரை ரோல் செய்து கமெண்ட் அடிக்கிறார்கள். ஆனால் விஜய் முன்னணி நடிகராக இருந்தாலும் இத்தனை வருடங்களாக தன்னுடன் பழகிய நண்பரை மறக்காமல் இருக்கின்றாரே என்று இவர்களது நட்பை குறித்து ரசிகர்கள் பாராட்டவும் மறக்கவில்லை. எதிர்பார்புகளே இல்லாம இருக்கும் ஒரு உறவு தான் நட்பு.

What do you think?

விரைவில் ஓடிடி தளத்தில் பிரம்மாண்டமாக வெளிவரும் ஹாரி பாட்டர்

பிரபல நடிகர் ஒருவர் என்னை காதலித்து ஏமாற்றியது உண்மை தான்.. நடிகை கிரண் ஆதங்கம்