in

புற்றுநோய் பாதிப்பால் சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மறைவு


Watch – YouTube Click

புற்றுநோய் பாதிப்பால் சீரியல் நடிகர் யுவன்ராஜ் நேத்ரன் மறைவு

யுவன்ராஜ் நேத்ரன் ஒரு தொலைக்காட்சி நடிகர், பொன்னி, மன்னன் மஞ்சள் மற்றும் மகாலட்சுமி போன்ற சீரியல்கலில் நடித்து ரசிகர்களை ஈர்த்தவர். அவருடைய நடிப்புத் திறமை அவருக்குப் பரவலான அங்கீகாரத்தைப் பெற்றுத்தந்தது.

நீண்ட காலமாக புற்றுநோயுடன் போராடிய நடிகர் மரணமடைந்தார். பாக்கியலட்சுமி சீரியல் நடித்தவர் திடீரென்று உடல்நலம் பாதிக்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.இவருக்கு புற்றுநோய் இருப்பதை அவருடைய மகள் அண்மையில் வெளியிட்ட இன்ஸ்டா போஸ்ட் மூலம் பலருக்கு தெரிய வந்தது. தனது தந்தையை எப்படியும் நாங்கள் மீட்டு விடுவோம் என்று கண்ணீருடன் பதிவிட்டு இருந்தார் .நடிகர் நேத்ரன் நடிகை தீபாவை திருமணம் செய்து கொண்டவருக்கு அர்ச்சனா, அபிநயா என்ற இரு மகள்கள் உள்ளனர்

இவரின் மகள்களும் தற்போது சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள் நடிகை தீபா தற்போது சிங்கப்பெண்னே என்ற சன் டிவி சீரியல் நடிக்கிறார் இவரை மீட்டு விட வேண்டும் என்று போராடிய இவர்களின் முயற்சி பலனளிக்காமல் நேத்ரன் மறைந்துவிட்டார். நேத்ரன் இன்ஸ்டாகிராமில் கடைசியாக வெளியிட்ட பதிவில், அவர் தனது இளைய மகள் அஞ்சனா அவருக்காக தயாரித்த குக்கீகளின் படத்தைப் பகிர்ந்துள்ளார். சீரியல் நடிகர்கள் தங்களது கண்ணீர் அஞ்சலியை பதிவு செய்து வருகின்றனர். தந்தையை பறிகொடுத்து தவிக்கும் இரு மகள்கலுக்கும் பிரபலங்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவிக்கின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

எல்லதையும் இழந்து ஜீரோ…வாகி விட்டோம் மைனா நந்தினி Yogeswaran பரபரப்பு காணொளி

இனிமே தான் நயன்தாராவுக்கு தர்ம அடி