சீரியல் நடிகர்கள் சங்கீதா அரவிந் திருமணம் நேற்று நடைபெற்றது
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியல் மூலம் பிரபலமான சங்கீதாவும் சீரியல் நடிகர் அரவிந்தும் காதலிப்பதாக அண்மையில் தெரிவித்த இவர்களின் திருமணம் நேற்று நடைபெற்றது.
அண்மைக்காலமாக பல சீரியல் நடிகர்கள் திருமணம் செய்த நிலையில் புதிதாக இவர்களும் திருமண பந்தத்தில் இணைந்து உள்ளனர்.
வி.ஜெ.வாக தனது பயணத்தை தொடங்கியவர் அழகு, தமிழும் சரஸ்வதியும் போன்ற சீரியலில் நடித்தார் சங்கீதா.
அரவிந்த் தற்பொழுது அய்யனார் துணை என்ற சீரியலில் நடித்து வருகிறார். இவர்களின் திருமணம் சென்னையில் நேற்று உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது தங்களின் திருமண புகைப்படங்கள் இந்த ஜோடி இன்ஸ்டாவில் வெளியிட ரசிகர்கலும் தங்கள் வாழ்த்துகளை பகிர்கின்றனர்.