in

சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி நூதன முறையில் ஜி.பே-வில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்களை மிரட்டி நூதன முறையில் ஜி.பே-வில் லஞ்சம் வாங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்துள்ளார்

புதுச்சேரியில் உதயநிதி ஸ்டாலினை வரவேற்று பேனர் வைத்த விவகாரம்.தமிழகத்தைச் சேர்ந்த திமுக நிர்வாகி முதலமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சரை மிரட்டிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் நமச்சிவாய பேட்டி.

காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்ற சம்பவங்களை தடுத்தல் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துதல் தொடர்பான காவல்துறை உயர் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் டி.ஜி.பி அலுவலகத்தில் நடைபெற்றது.

டி.ஜி.பி.ஷாலினி சிங் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் என திரளாக கலந்து கொண்டனர்

பெருகி வரும் குற்றங்களை தடுப்பதற்காக காவல்துறையினரால் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மேலும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும் காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பொதுப்பணித் துறையும் போக்குவரத்துக் காவல் துறையும் சேர்ந்து போக்குவரத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நமச்சிவாயம்.

புதுச்சேரி மாநில மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற ஒரு நிலைமையை உருவாக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளதாக குறிப்பிட்டார்.

இரவு நேரங்களில் சட்ட ஒழுங்கு போலீசார் மட்டும் இன்றி போக்குவரத்து போலீசாரும் ரோந்து பணிகளை மேற்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப் பட்டதாக தெரிவித்த அவர் புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த 34 இடங்களில் சோலாரில் இயங்கும் டிஜிட்டல் சிக்னல் அமைக்கப்படுகிறது இது விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.மேலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி குற்றவாளிகள் நடமாட்டம் மற்றும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலங்கள் அமைக்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.இதற்காக கோப்புகளை அனுப்பி இருக்கிறோம் டெல்லி சென்று மத்திய அரசை வலியுறுத்தி மேம்பாலம் கட்டுவதற்கான அனுமதி விரைவில் பெறப்படும் என்றார்.60க்கும் மேற்பட்ட உதவி ஆய்வாளர் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது என்றும்

ஹெல்மெட் அணியாதவரிடம் விதிமுறைகளை மீறி அபராதம் விதித்து காவலர்கள் ஜி பே மூலமாக பணம் வாங்குவது,பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் நமச்சிவாயம் எச்சரித்தார். தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த நமச்சிவாயம் தமிழகத்தைச் சேர்ந்த திமுக உறுப்பினர் புதுச்சேரியில் உதயநிதி ஸ்டாலினுக்காக பேனர் வைத்த விவகாரத்தில் அதிகாரிகளிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார் மேலும் முதலமைச்சர் உள்துறை அமைச்சரை புதுச்சேரியை விட்டு தாண்ட முடியாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என கேள்வி எழுப்பினர். இதற்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

புதுச்சேரியில் கருத்துரிமை சுதந்திரம் என்ற பெயரில் முதல்வர், அமைச்சர், கவர்னரை கண்டித்து போஸ்டர் ஓட்டுகிறார்கள் இது தவறு, ஜனநாயக வரைமுறையோடு அவர்கள் கேட்க வேண்டும், வரைமுறைகளை மீறினால் கடுமையான நடவடிக்கை காவல்துறை எடுக்கும் என்றார்.

What do you think?

நடிகர் விஜய்யின் GOAT திரைப்படத்திற்கு ஏன் சிறப்பு காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை என தெரியவில்லை என மதுரையில் செல்லூர் ராஜு பேட்டி

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழும் புதுச்சேரி அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய 334-ம் ஆண்டு திருவிழா