in

கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை

கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை

 

போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் …

கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை பாயும் …

வடக்கு மண்டல ஐஜி ஆஸ்ரா கார்க் எச்சரிக்கை…

நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமான திருவண்ணாமலையில் வருகின்ற டிசம்பர் 4-ம் தேதி குடியேற்றத்துடன் கோலாகலமாக திருக்கார்த்திகை தீபத் திருவிழா தொடங்கி டிசம்பர் 13ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களிலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் காவல்துறையின் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் தலைமையில் தீபத் திருவிழா பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் காவல்துறை துணைத் தலைவர் தேவராணி, திருவண்ணாமலை திருப்பத்தூர் ராணிப்பேட்டை காவல் துறை கண்காணிப்பாளர்கள், துணை கண்காணிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மண்டல காவல்துறை தலைவர் ஆஸ்ரா கார்க் …

கடந்த ஆண்டைப் போல கார்த்திகை தீபத் திருவிழாவிற்கு இந்த ஆண்டும் காவல்துறையின் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தீவிரமாக திட்டமிட்டு வருவதாகவும்,13 ஆம் தேதி தீபத் திருவிழா 14 மற்றும் 14 ஆகிய இரண்டு நாட்கள் பௌர்ணமி தொடர்ந்து மூன்று நாட்கள் அதிக அளவு பக்தர்களின் கூட்டம் இருக்கும் என்பதால் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முழு வீச்சில் காவல்துறையினர் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்.

பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக இந்த முறை திருவண்ணாமலையை சுற்றியுள்ள 9 சாலைகளில் 25 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்க உள்ளதாகவும், பக்தர்கள் தங்களது கார்களை பார் செய்ய ஏதுவாக இந்த முறை 75 முதல் 120 கார் பார்க்கிங் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் பக்தர்களின் வசதிக்காக விரைவில் கார் பார்க்கிங் முகவரி மற்றும் கூகுள் லொகேஷன் அனைத்தும் சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் என்றும் அதனை பயன்படுத்தி பக்தர்கள் கார் பார்க்கிங் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதனை தவிர்த்து சாலைகளில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பார்க் செய்யும் உரிமையாளர்கள் மீது ஓட்டுனர்கள் மீது கடுமையான சட்ட ரீதியான நடவடிக்கை பாயும் என்றும் எச்சரித்தார்.

தொடர்ந்து பேசியவர், திருவண்ணாமலை மாநகரம், மாட வீதி, கிரிவலப் பாதை உள்ளிட்ட இடங்களில் பக்தர்களை பாதுகாக்கும் வகையில் 1 கிலோமீட்டருக்கு 1 பறக்கும் படை வீதம், 14 கிலோ மீட்டருக்கு 14பறக்கும் படைகளும், மாட வீதிகளில் 4 பறக்கும் படைகளும் என மொத்தம் 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு 1 காவல் துணை ஆய்வாளர் தலைமையில் 5 காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவர் என்றும் புகார் ஏதேனும் பெறப்பட்டால் சம்பவ இடத்திற்கு பறக்கும் படையினர் சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் தெரிவித்தார்.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த பல்வேறு துரித ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் கூறிய அவர், கிரிவலப் பாதை மாடவீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 700 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

கிரிவலப் பாதையை இணைக்கும் 9 சாலைகளிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கிரிவலம் வரும் பக்தர்களை அச்சுறுத்தும் வகையில் எவரேனும் நடந்து கொண்டால் அவர்கள் மீது கடுமையான தண்டனை பாயும் என்றும் எச்சரித்தார்.

What do you think?

மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் தரங்கம்பாடி பகுதியில் பலத்த மழை

கிரிவலப் பாதையை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட பொதுப்பணி துறை அமைச்சர் எ.வ.வேலு…