தனது உடலை தானம் செய்த ஷிஹான் ஹுசைனி
ரத்தப் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் வில்வித்தை பயிற்சியாளரும் தற்காப்புக் கலை நிபுணருமான ஷிஹான் ஹுசைனிக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் அறிவுறுத்தலின்படி இந்த உதவி வழங்கப்பட்டுள்ளது. ஷிஹான் ஹுசைனி ஒரு தற்காப்புக் கலை நிபுணர், வில்வித்தை ஆசிரியர், சிற்பி, நடிகர், தொகுப்பாளர் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
திறமைக்கு மறு உருவம், அவர் ஹுசைனி இரத்த புற்றுநோய் மற்றும் அப்லாஸ்டிக் அனீமியா நோயறிதலை வெளிப்படுத்தியபோது அனைவரிடமும் ஒரு சோகம் பரவியது.
தனது முன்னாள் மாணவர்களான பவன் கல்யாண் மற்றும் விஜய் ஆகியோரிடம் ஒரு கோரிக்கையை வைத்தார். ஆனால் இன்றுவரை அவர்கள் ஹுசைனை பார்க்கவும் இல்லை உதவவும் இல்லை நன்றி இல்லை அவர்களுக்கு என்று பத்திரிகையாளர் அந்தணன் கூறியுள்ளார்.
தற்போது ஷிஹான் ஹுசை போஸ்ட் ஒன்றை வெளிட்டுள்ளார். மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக என் உடலை நான் இறந்த 3 நாட்களுக்குப் பிறகு ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு தானம் செய்ய விரும்புகிறேன்.
நிறுவனர் ஸ்ரீ ராமசாமி உடையார் பல ஆண்டுகளாக எனது இந்திய கராத்தே சங்கத்தின் தலைவராக இருந்தார், மேலும் எனது ‘பாம்பு கடி உலக சாதனை’க்கும் தலைமை தாங்கினார்.
எனது வில்வித்தை மற்றும் கராத்தே மாணவர்களிடம் பாதுகாப்பாக எனது ‘இதயத்தை’ மட்டும் ஒப்படைக்குமாறு கல்லூரியை கேட்டுக்கொள்கிறேன். இதைப் படிக்கும் கல்லூரியின் அதிகாரி உடனடியாக என்னை தொடர்பு கொண்டு அதிகாரப்பூர்வ ஒப்புதலையும் எனது கையொப்பத்தையும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன், என்று பதிவிட்டுள்ளார்.