போதைப்பொருள் …. வழக்கில் கைதான ஷைன் டாம் சாக்கோ
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கேரள காவல்துறையினரால் நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டுள்ளார்.
ஷைன் டாம் சாக்கோ தமிழில் “ஜிகர்தண்டா டபுள்எக்ஸ்”, அத்தியாயம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். விரைவில் அவர் மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அவர் மீது பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு ஹோட்டலில் நடத்தப்பட்ட போதைப்பொருள் சோதனையைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அப்போது ஷைன் டாம் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக, கொச்சி காவல்துறையினர் நடிகரை விசாரணைக்கு வரும்மாறு நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். திருச்சூரில் உள்ள அவரது வீட்டிற்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கச் சென்றபோது, அவர் அங்கு இல்லாததால் , அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சோதனையின் போது அவர் ஏன் தப்பி ஓடினார் என்பதை விளக்குமாறு நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. புதன்கிழமை இரவு 10:45 மணியளவில் போதைப்பொருள் வழக்கில் சந்தேகப்படும் நபரை சிறப்பு போதைப்பொருள் தடுப்புப் படையினர் ஒரு ஹோட்டலில் பிடிக்க சென்றனர், ஹோட்டல் பதிவேட்டில் ஷைன் டாமின் பெயர் பட்டியலிடப்பட்டிருப்பதைக் கண்டறிந்த அவர்கள் அவரது அறைக்குச் சென்றபோது, அவர் ஏற்கனவே தப்பிச் சென்றுவிட்டார்.
சிசிடிவி காட்சிகளில்,…. போலீசார் ஹோட்டலுக்குள் நுழைந்தபோது ஷைன் தப்பிச் செல்வதைக் காட்டுகிறது. கூடுதலாக, மலையாள நடிகை வின்சி அலோஷியஸ், “ஸ்துதியாயிருக்கட்டே” படத்தின் படப்பிடிப்பின் போது, போதைப்பொருள் எடுத்து கொண்டு தம்மிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் ஷைன் டாம் மீது புகார் அளித்திருந்தார்.