in

திருவண்ணாமலையில் திருவாசகத்தையும் தலையில் சுமந்து கிரிவலம் மேற்கொண்ட சிவனடியார்கள்


Watch – YouTube Click

உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் அலங்கரிக்கப்பட்ட நடராஜபெருமானுடன் திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து கிரிவலம் மேற்கொண்ட சிவனடியார்கள்…

நகிரி வாத்தியம் முழங்க சிவதாண்டவம் ஆடி 150 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கிரிவலம்…

கோடை வெயில் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்படுகிறது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலையில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் இன்றைய வெயிலின் அளவு 104 டிகிரியாக சுட்டெரித்தது.

இந்த நிலையில் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திருவண்ணாமலை திருமுடி சுமக்கும் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் உலக நன்மைக்காகவும், மழை வர வேண்டியும் நடராஜபெருமான் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி தலையில் திருவாசகத்தையும், திருமுடியையும் சுமந்து கிரிவலம் மேற்கொண்டனர்.

திருவண்ணாமலை ராஜகோபுரம் அருகே திருமுடிகளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்று திருத்தேரில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த நடராஜ பெருமானுடன் சுமார் 150 க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து 14 நாட்கள் விரதம் இருந்து திருமுடியையும், திருவாசகத்தையும் தலையில் சுமந்து கொளுத்தும் வெயிலில் நமசிவாய மந்திரத்தை ஓதியபடியும், சங்கொலி முழங்கியும் நகிரி வாத்தியங்கள் முழங்க பெண்கள் உள்ளிட்டவர்கள் சிவதாண்டவம் ஆடி கிரிவலம் மேற்கொண்டனர்.

14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்ட சிவனடியார்கள் திருவாசகம் இல்லாத அடியார்களுக்கு வழிநெடுகிலும் திருவாசகத்தை இலவசமாக வழங்கியும், திருவாசகம் அனைவரது வீட்டிலும் இருக்கவே இந்த கிரிவலம் மேற்கொண்டதாகவும் தெரிவித்தனர்.


Watch – YouTube Click

What do you think?

கரூரில் கோடையின் வெப்பத்தை தணிக்க தேமுதிக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி செல்வதில் தடங்கல் பயணம் ஒத்திவைப்பு