மயிலாடுதுறை தொகுதியில் வாக்களிக்க சென்னையில் இருந்து வந்த 85 வயது ஆன பிரபல 5ரூபாய் டாக்டர் வாக்கு நீக்கப்பட்டதால் அதிர்ச்சி. மகாராஷ்டிராவில் இருந்து வந்தவர் வாக்களிக்க முடியாததால் வாக்குசாவடி மையத்தில் வாக்குவாதம்
மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் இன்று காலை 7:00 மணி முதல் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. . இந்த நிலையில் மயிலாடுதுறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலருக்கு வாக்காளர் பெயர் இல்லாததால் திரும்பிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறையில் ஐந்து ரூபாய்க்கு மருத்துவ சேவை செய்த பிரபல டாக்டர் ராமமூர்த்தி வயது முதிர்வு காரணமாக சென்னைக்கு இடம் பெயர்ந்த நிலையில் இன்று வாக்களிப்பதற்காக மயிலாடுதுறை மகாதானத்தெருவில் உள்ள டிபிடிஆர் தேசிய மேல்நிலைப் பள்ளியில் சென்னையில்’ இருந்து மனைவியுடன் வாக்களிக்க வந்தபோது வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்று திருப்பி அனுப்பப்பட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார். இந்த வாக்குசாவடி மையத்தில் 450க்கும் மேற்பட்ட ஓட்டுகள் திட்டமிட்டு நீக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாமக வேட்பாளர் ம.க. ஸ்டாலின் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. இதேபோல் கொத்ததெரு தம்பிக்குநல்லான்பட்டினம் தொடக்கபள்ளி வாக்குசாவடியில் வாக்களிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வாக்களிக்க வந்த ராஜ்குமார் என்ற இளைஞர் தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.