in

அரிட்டாபட்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மகன் படப்பிடிப்பு ரத்து

அரிட்டாபட்டி பகுதியில் முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மகன் படப்பிடிப்பு ரத்து…

மதுரை – மேலூர் அருகே தமிழகத்தின் முதல் பல்லுயிரித்தலமான அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம் பகுதிகளில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அண்ணன் மகன் நடிகர் அருள்நிதி நடிக்கும் படப்பிடிப்பு இன்று நடைபெற்றது. இதில் அதிக ஒலியை எழுப்பக்கூடிய வெடிப்பொருட்களை பயன்படுத்தி படக்காட்சிகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறிந்து அங்கு கூடிய அப்பகுதி பொதுமக்கள் படக்குழுவினரை முற்றுகையிட்டு, படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு வேதாந்தா நிறுவனத்திற்கு அனுமதி அளித்ததை தொடர்ந்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் வெடிச்சத்தத்தை கேட்ட பொதுமக்கள் சுரங்கம் அமைக்க குழுவினர் வந்துள்ளனரோ என்று அச்சத்தோடு அப்பகுதியில் கூடிய போதுமக்கள், படப்பிடிப்பு நடத்துவதை கண்டதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அங்கு வந்த ஒத்தக்கடை காவல்துறையினர் படப்பிடிப்பை ரத்து செய்யுமாறு குழுவினரிடம் கேட்டுக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அருள் நிதியின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது

What do you think?

இரண்டாவது போயஸ் கார்டனின் புயலே !! ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

உலக மண் தினத்தை முன்னிட்டு திருமண ஜோடியினருக்கு விதைப்பந்துகளை பரிசாக வழங்கிய கல்லூரி மாணவ மாணவிகள்