in

 ஸ்ரீ ஐந்துமுளி சுவாமி ஆடித்திருவிழா கறி சமைத்து சாமி தரிசனம்

 ஸ்ரீ ஐந்துமுளி சுவாமி ஆடித்திருவிழா கறி சமைத்து சாமி தரிசனம்

 

மேலூர் அருகே ஆடி மாதத்தை முன்னிட்டு வேப்பிலையில் கறி சமைத்து கொண்டாடப்பட்ட வினோத சமத்துவ திருவிழா ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்…

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் ஸ்ரீ ஐந்துமுளி சுவாமி ஆடித்திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. சுந்தரராஜபுரம், வீர சூடாமணிப்பட்டி, கச்சிராயன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஐந்து கரைகாரர்களுக்கு பாத்தியப்பட்ட இத்திருவிழாவில் இந்த ஆண்டு நூற்றுக்கும் மேற்பட்ட கிடாய்களும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேவல்களும் நேர்த்தி கடனாக பெறப்பட்டன. அவை அனைத்தும் ஸ்ரீ ஐந்துமுளி சாமிக்கு பலியிடப்பட்டு கிடாய் மற்றும் கோழிக்கறிகள் ஒன்றாக கலக்கப்பட்டு அவை அனைத்தும் மண்பானையில் வேப்பிலை வைத்து ஆண்கள் மட்டும் கலந்து கொண்டு சமைத்தனர்.

பல நூறு ஆண்டுகளாக பாரம்பரியமாக நடந்து வரும் இத்திருவிழாவில் ஆடி மாதம் இரண்டாம் திங்கள் சாமி ஆடுதல் நிகழ்ச்சி நடைபெற்று அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான சமையல் பொடிகள் எதுவும் பயன்படுத்தாமல் வேப்பிலையை பயன்படுத்தி கறி சமைத்து பகிர்ந்து அளிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முத்தாய்ப்பாக சமூக நல்லிணக்கத்தினை வலியுறுத்தும் விதமாக பால்குடியைச் சேர்ந்த இஸ்லாமிய சமுதாய நாட்டாமை வகையறாவை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம அனைத்து சமுதாயத்தினர் பெரியகுளம் கண்மாய் பாறையில் அமர்ந்து பாத்தியா ஓதி கூட்டு பிராத்தனை செய்து சக்கரை பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த பாரம்பரிய விழாவில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

What do you think?

இவன் எல்லாம் எங்கிருந்து கதாநாயகனாக போகப் போகிறான்… தனுஷை நக்கல் பண்ணிய கலா மாஸ்டர்

அரசனுக்கும் பாதுகாப்பு இல்லை ஆண்டிக்கும் பாதுகாப்பு இல்லை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்