ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மக்களுக்கு மதுரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினர்
ஜம்மு – காஷ்மீரின் பிரபல சுற்றுலா நகரமான பஹல்காமில் நேற்று திடீரென தீவிரவாதிகள் அங்கிருந்த சுற்றுலா பயணிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு கொடூர தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டினர், இந்திய கடற்படை அதிகாரி வினய் நர்வால், உளவுத்துறை அதிகாரி மனிஷ் ரஞ்சன் உட்பட 26 பேர் பலியாகினர்..
கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், அரியானா, குஜராத் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளத்தைச் சேர்ந்தவர்களும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் உலகையே பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலிகள் செலுத்தப்பட்டு வருகிறது..
இந்நிலையில் இன்று மாலை மதுரை பிபி குளம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மதுரை மாவட்ட பாஜக தலைவர் மாரி சக்கரவர்த்தி கட்சி நிர்வாகிகள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்தினார்கள்..
நூற்றுக்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகள் கையில் மெழுகுவத்தி ஏந்தி மௌன அஞ்சலி செய்தனர்..
முன்னதாக சாலையிலிருந்து ஊர்வலமாக மெழுகுவர்த்தி ஏந்தி வந்த பாஜக நிர்வாகிகள் பின்னர் கட்சி அலுவலகத்தில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொது மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்தி பிரார்த்தனை செய்தனர்…