in

சிம்பு தனது 42 பிறந்த நாளில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்

சிம்பு தனது 42 பிறந்த நாளில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்

 

பிரபல நடிகர் சிலம்பரசன் இன்று தனது 42 பிறந்தநாளில் ‘ஆத்மேன் சினி ஆர்ட்ஸ்’ (Atman Cine Arts) என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார்.

அவரது தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் முதல் படம் சமீபத்திய பிளாக்பஸ்டர் ‘அமரன்’ படத்தை இயக்கிய பிரபல தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளார்.

இந்த அறிவிப்பை சிம்பு சமூக ஊடகங்களில் வெளியிட்டார். தனது இன்ஸ்டாகிராம் டைம்லைனில், “இறைவனுக்கு நன்றி!) @atman_cinearts மூலம் தயாரிப்பாளராக நான் ஒரு புதிய பயணத்தில் அடியெடுத்து வைக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

எனது 50வது படத்துடன் இதை தொடங்குவது தான் சரி, இது எனக்கும் @desinghperiyasamy க்கும் ஒரு கனவுத் திட்டமாகும்.!

இந்தப் புதிய முயற்சிக்காக உற்சாகமாக இருக்கிறேன், எப்போதும் போல உங்கள் அனைவரின் அன்பையும் ஆதரவையும் உண்மையிலேயே எதிர்பார்க்கிறேன்! நீங்களா இல்லமா நான் இல்ல என்று பதிவிட்டுள்ளார்.

STR 50 படத்தின் போஸ்டரில் சிம்புவைப் போலவே ஒரு இளம் பையன் எரியும் தீ பந்தத்தை ஏந்தியபடி காட்சியளிக்கிறார். தேசிங் பெரியசாமி எழுதி இயக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். தொழில்நுட்பக் குழுவில் பிரவீன் ஆண்டனி எடிட்டராகவும், கெவின் குமார் சண்டைக்காட்சிகளை ஒருங்கிணைக்கிறார்.

What do you think?

மூன்றாம் திருமணம் செய்யும் அமீர்கான்

திருவாலங்காடு ஸ்ரீ வள்ளி தேவசேனா சுப்பிரமணிய சுவாமி ஆலய மகா கும்பாபிஷேகம்