23வது நினைவு நாளையொட்டி சிம்ரன் பதிவு
நடிகை சிம்ரன் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் கலக்கக் கூடியவர் இவரின் தங்கை மோனல் சிம்ரனை போலவே சினிமா துறையில் ஒரு ரவுண்டு வருவார் என்று நினைத்த பொழுது வெகு சீக்கிரம் அவரை காலம் அழைத்துக் கொண்டது.
நடிகை மோனால் பார்வை ஒன்றே போதும் , பத்ரி, சமுத்திரம், இஷ்டம் விவரமான ஆளு, உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
2002 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டவரின் 23வது நினைவு நாளை ஒட்டி சிம்ரன் தனது சமூக வலைத்தளத்தில் இந்த 23 வருட காலம் நாங்கள் ஒரு நாள் கூட உன்னை நினைக்காமல் இருந்ததில்லை நீ மறைந்து இருக்கலாம் ஆனால் யாராலும் மறக்கப்படவில்லை என்று பதிவிட்டுள்ளார்.