பாடகி பி சுசிலா ….. கலைத்துறை வித்தகர் விருது …வழங்கிய தமிழக முதல்வர்மு. க. ஸ்டாலின்
ஒவ்வொரு ஆண்டும் திரை உலகில் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்கான விருது கலைஞர் கருணாநிதி பேரில் கலைத்துறை வித்தகர் விருது என்று வழங்கப்படும்.
ஜூன் 3ஆம் தேதி அன்று கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த விருதுகாக தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அதன் தலைவர்களாக திரைப்பட இயக்குனர் எஸ் பி முத்துராமன், நடிகர் சங்க தலைவர் நாசர், இயக்குனர் கரு பழனியப்பன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
அந்த குழுவின் பரிந்துரைப்படி 2022 ஆம் ஆண்டுக்கான கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது 500 திரைப்படங்களுக்கு மேல் கதை திரைக்கதை வசனம் எழுதி புகழ் பெற்ற ஆரூர்தாஸ் …க்கு முதலமைச்சராக இந்த விருதை வழங்கினார்.
மேலும் 20000 பாடலுக்கு மேல் பல மொழிகளில் பாடிய பின்னணி பாடகி பி சுசிலா, கவிஞர் மு. மேத்தாவிற்கும் 2023 காண வித்தகர் விருது வழங்கப்பட்டது.
தற்பொழுது அந்த விருதையும் 10 லட்சத்திற்கான காசோலையும் இவர்களுக்கு தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வழங்கியுள்ளார்.