பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் சாலை என பெயர் மாற்றம்
பிரபல பாடகர் எஸ்பிபி பாலசுப்ரமணியம் கொரோனா தொற்று ஏற்பட்டு மறைந்தார். இவனின் மறைவு கோடிக்கணக்கான ரசிகர்களை துயரத்தில் ஆழ்த்தியது.
அவர் மறைந்த பிறகும் இன்னும் மக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாடகர் பாலசுப்பிரமணியன் பெயரில் சாலையின் பெயர் பலகையை திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது நாற்பதாயிரம் பாடலுக்கு மேல் பாடிய பாலசுப்ரமணியம் வாழ்ந்த நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள காம்தார் நகர் சாலைக்கு அவருடைய பெயரை சூட்ட வேண்டும் என்று குடும்பத்தினரும் ரசிகர்களும் வேண்டுகோள் வைத்தனர்.
முதலமைச்சர் மு க ஸ்டாலின் காம்தார் நகர் முதன்மைச் சாலை…இக்கு எஸ்பிபி பாலசுப்ரமணியம் சாலை என்று பெயர் சூட்ட உத்தரவிட்டு ஆணையம் பிறப்பித்தார்.
எஸ்பிபி பாலசுப்ரமணியனின் மகன் எஸ்பி சரண் கூறும்பொழுது எங்கள் குடும்பத்தினருக்கு கிடைத்த அங்கீகாரம் என்று நான் கூற மாட்டேன் எஸ்பிபி ரசிகர்களுக்கு கிடைத்த அங்கீகாரம் அப்பாவுக்கு ஒரு நினைவிடமும் கட்டி வருகிறோம் அங்கு சென்றால் அவரது புகைப்படங்கள் மற்றும் அவர் வாங்கிய விருதுகள் அனைத்தையும் பார்க்கலாம் இது ரசிகர்களுக்காக நாங்கள் செய்து வருகிறோம்.
அப்பாவின் பெயர் சாலைக்கு சூட்டியது மகிழ்ச்சி அந்த சாலையில் நானும் எனது அப்பாவும் கிரிக்கெட் விளையாடுவோம் அங்கு ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் கூட நானும் அப்பாவும் இறங்கி அந்த அடைப்பை எடுப்போம் அந்த ஏரியா எங்களுக்கு பாதுகாப்பானதாக இருந்ததால் அங்கிருந்து நாங்கள் வேறு எங்கும் செல்லவில்லை அப்பாவின் பெயரை சாலைக்கு சூட்டியதில் எனக்கு பெரு மகிழ்ச்சி என்றும் முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தார்.