in

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் தேர்தல்

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் தேர்தல்

 

90 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற சீர்காழி நகர வர்த்தக சங்க தலைவர் தேர்தலில் கல்யாணசுந்தரம் 13 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி ஆதரவாளர்கள் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஜெயின் சங்க கட்டிடத்தில் 90 ஆண்டுகளுக்கு பிறகு சீர்காழி நகர வர்த்தகர்கள் சங்க தலைவர் தேர்தலில் தலைவர் பதவிக்கு கல்யாணசுந்தரம், சுப்ரமணியன், ஜெயராமன், பஜல் ரஹ்மான் என நான்கு பேர் போட்டியிட்டனர். 1474 உறுப்பினர்களில் 1329 உறுப்பினர்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற்ற தேர்தலில் வாக்களித்தனர்.

மாலை ஆறு மணிக்கு வாக்குகள் ஆறு சுற்றுகளாக சட்ட ஆலோசகர் சுந்தரய்யா தலைமையில் 7 பேர் கொண்ட தேர்தல் பொறுப்பாளர்கள் குழு முன்னிலையில் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் முதல் சுற்றிலிருந்து தன்னுடன் போட்டியிட்ட வேட்பாளர்களைவிட கூடுதல் வாக்குகள் பெற்று கல்யாணசுந்தரம் முன்னிலை பெற்றார்.

ஆறாவது சுற்று முடிவில் கல்யாணசுந்தரம் 634 வாக்குகளும்,சுப்ரமணியன் 621 வாக்குகளும்,பஜல் ரஹ்மான்45 வாக்குகளும் ஜெயராமன் 18 வாக்குகளும் செல்லாத வாகாகுகள் 11 வாக்குகள் பதிவான நிலையில் தன்னுடன் போட்டியிட்ட சுப்ரமணியனை விட 13 வாக்குகள் அதிகம் பெற்று கல்யாணசுந்தரம் வெற்றி பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் குழு வெற்றி சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து வெற்றி பெற்ற கல்யாணசுந்தரத்தின் ஆதரவாளர்கள் மாலை அணிவித்து பட்டாசு வெடித்து உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

What do you think?

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் விறுவிறுப்பாக நடக்கும் பராசக்தி

மயிலாடுதுறை மாவட்டம் பகுதிகளில் கடும் பனிமூட்டம்